ஞாயிறு, நவம்பர் 27, 2011

வழி மொழி - புதிய புதிர் - உதாரணம், விதிகள், தீர்க்கும் முறை

இதுவும் கலைமொழி போன்றதே, ஆனால் அதைவிட எளிதாக இருக்கும். மூளைக்கு அதிகம் வேலை இல்லை. இந்தமுறையும் ஒரு உதாரணத்திற்காக சிறிய புதிரே.

வட்டமிட்ட இடத்தில் ஆரம்பித்து  பொருள் வரும் வண்ணம்,  அருகில் உள்ள கட்டங்களில் (எட்டுத்திசையின் எந்தத் திசையாகவும் இருக்கலாம். சதுரங்கத்தில் இராஜா நகர்வது போல) ஒவ்வொரு கட்டமாக பயணம் செய்துகொண்டே போனால் மறைந்த்துள்ள செய்தியைக் காண முடியும்.  எழுத்து உள்ள  கட்டங்களில் மட்டும் பயணம் செய்யவும்.  (வட்டத்திலிருந்து நீங்கள் சென்ற வழியிலுள்ள எழுத்துக்கள் தான் அந்த செய்தி)

கீழே கொடுக்கப்பட்டுள்ள பெட்டிகள் அடுத்த வார்த்தையின் நீளத்தை அறிந்துகொள்ள உதவும். தட்டச்சு செய்யவும் உதவும்.


இது ஒரு எளிய புதிரே. இதற்கு தீர்வுகாண சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருப்பினும் சொல்கிறேன்.

1. ஒருவேளை நீங்கள் செல்லும் பாதையில் முன்னேற முடியவில்லை என்றால், அருகாமையில் குறைவான கட்டங்கள் உள்ள ஏதேனும் ஒரு எழுத்திலிருந்து வார்த்தைகள் புலப்படுகின்றனவா எனக் கவனியுங்கள். பெரும்பாலும் நான்கு மூலைகள், ஏற்கனவே வந்த பாதையின் ஓரங்கள் இதற்கு சரியான தேர்வாக இருக்கும்.

2. அ, ஆ போன்ற உயிரெழுத்துக்களின் அருகில் இன்னொரு உயிரெழுத்து வராது. அதே போல க், த் போன்ற மெய்யெழுத்துக்களின் அருகிலும் இன்னொரு மெய்யெழுத்து பொதுவாக வராது.

3. பென்சில் கொண்டு பாதை வரைவதே எளிதான தீர்க்கும் முறை. இந்த படத்தை உங்கள் கணிணியில் இறக்கம் செய்துகொண்டு MS paint அல்லது photoshop போன்ற மென்பொருள்களைக் கொண்டும் நீங்கள் பாதை வரையலாம். இது காகிதங்களை மிச்சப்படுத்த அல்லது பிரிண்டர் இல்லாதவர்களுக்கு எளிதாக இருக்கும்.

திங்கள், நவம்பர் 21, 2011

கலை மொழி - விதிகள் - உதாரணம் / எடுத்துக்காட்டு

இது ஒரு நெடுக்கு வாட்டில் கலைந்துள்ள பழமொழி அல்லது ஒரு சிறிய பத்தி (பாரா). இதில் கலைந்துள்ள வார்த்தைகளை   சரியாக அமைக்க முயற்சி செய்து பாருங்கள்.  பிரிண்ட் செய்பவர்களுக்கு வசதியாக படம். படத்தைச் சொடுக்கினால் பெரிய அளவில் வரும். ஆன்லைனில் தீர்க்க விரும்புபவர்கள் கீழே உள்ள வெள்ளை பெட்டிகளில் தட்டச்சு செய்யவும். (தமிழ் தட்டச்சு உதவி)

கறுப்புக் கட்டங்கள் வார்த்தைகளுக்கு இடையே உள்ள இடைவெளியை குறிக்கிறது. கறுப்புக் கட்டம் வந்தால் மட்டுமே ஒரு வார்த்தை முடிந்ததாக அர்த்தம். எனவே ஒவ்வொரு வரியின் கடைசியிலுள்ள வார்த்தைகள் அடுத்த வரியிலும் தொடரலாம்.















தீர்ப்பதற்கான எளிய வழிமுறைகள் சில

1. மிகச் சில கட்டங்களை உடைய நெடுக்குக் கட்டங்களை (column) முதலில் தீர்க்க முயலுங்கள்

2. சில எழுத்துக்கள் மொழி முதலாய் வராது. மெய்யெழுத்துக்கள், னே, ழோ, றி  போன்றவை. எனவே வார்த்தையின் முதல் எழுத்தாய் அமைய வேண்டியவற்றில் இவற்றை ஒதுக்கலாம்.


3. பொருத்திய எழுத்துக்களை பென்சிலால் அடித்தோ, நிழலிட்டோ குறித்துக் கொண்டால், தீர்ப்பது எளிதாக இருக்கும். (ஆன் லைனில் அது கஷ்டம்.)


இது ஒரு உதாரணமே. எனவே சற்று எளிதாகவே இருக்கும்.


பி.கு.

இதே போன்ற புதிர் ஒன்றை (குறள் வளை) பூங்கோதை அவர்களின் வலைப்பூவில் காணலாம். பூங்கோதை பல புதிய தமிழ் புதிர்களை வடிவமைக்கிறார்கள். குறள் வளை எனக்கு மிகவும் கடினமாகத் தோன்றினாலும், பலர் அதற்கான விடையைக் கண்டறிந்தார்கள். எனக்கு அது சற்று ஏமாற்றமாக இருந்தது. அதே போன்ற புதிர் , கொஞ்சம் எளிமையாக.