வியாழன், பிப்ரவரி 09, 2012

சொல்லாங்குழி - மூன்றெழுத்து

சொல்லாங்குழியை தமிழ் கூறும் நல்லுலகிற்கு முதன் முதல் அறிமுகப்படுத்தியது பூங்கோதை. அவரது தளத்தில் சொல்லாங்குழி விதிகளை பார்த்துக்கொள்ளுங்கள்.




விதிகள்::

மறைந்துள்ள வார்த்தையை நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும். அதற்காக சில குறிப்புகளை கேள்விவார்த்தை/அதன் எழுத்துக்களின் இடத்தை பொறுத்து பூ/காய்/கனி என குறிப்புகள் தரப்படும்.

உயிர் ( ஃ உள்ளாக) – ஒரு வருக்கம், ஒவ்வொரு உயிர்மெய் வரிசையும் ஒரு வருக்கம்.
க வருக்கம் என்பதை க” என்று சுருக்கமாக இனி எழுதுவோம்.

க” – க,கா,கி,கீ,கு,கூ,கெ,கே,கை,கொ,கோ,கௌ,க்
அ” – அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ,ஃ
ன” – ன,னா,னி,னீ,னு,னூ,னெ,னே,னை,னொ,னோ,னௌ,ன்

கனி – சரியான எழுத்து சரியான இடத்தில் வந்தால்.
காய் – வருக்கத்தில் வேறு எந்த எழுத்தாவது (சரியான எழுத்து தவிர) சரியான இடத்தில் வந்தால் .
பூ – வருக்கத்தில் (சரியான எழுத்து உட்பட) எந்த எழுத்தாவது தவறான இடத்தில் வந்தால்.

இந்த குறிப்புகளைக்கொண்டு எந்த வார்த்தை மறைந்துள்ளது எனக்கண்டுபிடியுங்கள். (மாஸ்டர் மைன்ட் போல)

(என் வலைப்பூவில் உள்ள புதிர்கள் உயிர், மெய், உயிர்மெய் சேர்த்த தூய தமிழ் எழுத்துகள் உடையவை மட்டுமே. வடமொழி எழுத்துகள் இல்லை.)

புதிர்-1.
பதர்:: கனி - -
ஈரம்:: கனி காய் -

புதிர்-2.
தவிர் : - காய் -
ஆகும்: - காய் காய் -

புதிர்-3
மலடு : கனி - பூ
சாமம் : - காய் -

புதிர்-4
ஆயர் : பூ
கவிழ் : கனி - பூ
தரவு : காய் காய்
புதிர்-5.
இவர்:: கனி
அத்தை:: கனி பூ


எச்சம் விகுதி இல்லாத வார்த்தைகள், அதாவது மேகம் என்று தான் இருக்கும், மேக, மேகமே என்றெல்லாம் இருக்காது.

இங்கு இருக்கும் சில சொல்லாங்குழி புதிர்கள் சோதனை முயற்சி, இதில் ஏதேனும் தவறிருந்தால் சொல்லவும். கேள்வி/கணை சொற்கள் முடிந்தவரை குறைவாக தயாரித்துள்ளேன், (வழக்கம் போல கணிணி உதவியுடன்) .

4 கருத்துகள்:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. Please put comment moderation and remove Captcha....

    இப்படிக்கு
    சோம்பேறி

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு