ஞாயிறு, நவம்பர் 27, 2011

வழி மொழி - புதிய புதிர் - உதாரணம், விதிகள், தீர்க்கும் முறை

இதுவும் கலைமொழி போன்றதே, ஆனால் அதைவிட எளிதாக இருக்கும். மூளைக்கு அதிகம் வேலை இல்லை. இந்தமுறையும் ஒரு உதாரணத்திற்காக சிறிய புதிரே.

வட்டமிட்ட இடத்தில் ஆரம்பித்து  பொருள் வரும் வண்ணம்,  அருகில் உள்ள கட்டங்களில் (எட்டுத்திசையின் எந்தத் திசையாகவும் இருக்கலாம். சதுரங்கத்தில் இராஜா நகர்வது போல) ஒவ்வொரு கட்டமாக பயணம் செய்துகொண்டே போனால் மறைந்த்துள்ள செய்தியைக் காண முடியும்.  எழுத்து உள்ள  கட்டங்களில் மட்டும் பயணம் செய்யவும்.  (வட்டத்திலிருந்து நீங்கள் சென்ற வழியிலுள்ள எழுத்துக்கள் தான் அந்த செய்தி)

கீழே கொடுக்கப்பட்டுள்ள பெட்டிகள் அடுத்த வார்த்தையின் நீளத்தை அறிந்துகொள்ள உதவும். தட்டச்சு செய்யவும் உதவும்.


இது ஒரு எளிய புதிரே. இதற்கு தீர்வுகாண சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருப்பினும் சொல்கிறேன்.

1. ஒருவேளை நீங்கள் செல்லும் பாதையில் முன்னேற முடியவில்லை என்றால், அருகாமையில் குறைவான கட்டங்கள் உள்ள ஏதேனும் ஒரு எழுத்திலிருந்து வார்த்தைகள் புலப்படுகின்றனவா எனக் கவனியுங்கள். பெரும்பாலும் நான்கு மூலைகள், ஏற்கனவே வந்த பாதையின் ஓரங்கள் இதற்கு சரியான தேர்வாக இருக்கும்.

2. அ, ஆ போன்ற உயிரெழுத்துக்களின் அருகில் இன்னொரு உயிரெழுத்து வராது. அதே போல க், த் போன்ற மெய்யெழுத்துக்களின் அருகிலும் இன்னொரு மெய்யெழுத்து பொதுவாக வராது.

3. பென்சில் கொண்டு பாதை வரைவதே எளிதான தீர்க்கும் முறை. இந்த படத்தை உங்கள் கணிணியில் இறக்கம் செய்துகொண்டு MS paint அல்லது photoshop போன்ற மென்பொருள்களைக் கொண்டும் நீங்கள் பாதை வரையலாம். இது காகிதங்களை மிச்சப்படுத்த அல்லது பிரிண்டர் இல்லாதவர்களுக்கு எளிதாக இருக்கும்.

3 கருத்துகள்:

  1. பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்

    பதிலளிநீக்கு
  2. I just solved it but then see the answer by 10ammaa is visible! Have you published the next "வழிமொழி”?

    Muthu

    பதிலளிநீக்கு
  3. I just saw your வழிமொழி 2. So please ignore my last comment.

    Muthu

    பதிலளிநீக்கு