வியாழன், டிசம்பர் 01, 2011

முதல் குறுக்கெழுத்து

எப்படியும் எனது புதிரின் கேள்விகள் வாரமலர் ரகம் என்றாகிவிட்டது. எனவே இலகுவாக இருக்கவேண்டியதே எனது இலட்சியமாகிவிட்டது. அதிக வார்த்தைச்செறிவு (குறைந்த வெள்ளைக்கட்டங்களில் அதிக வார்த்தைகளை இடுவது) என இந்த புதிரை அமைத்துள்ளேன். பிழைகளை சுட்டிக்காட்டவும்.






குறுக்கு::
 
1.போதி
4. வித்தியாசமாகிறதே , திருப்பிப் பார்த்தால் தேர்ச்சி பெறுமா
6. தினசரி மாறும் எண்::
8. சட்னி, மசாலா அரைவை இயந்திரம் (ஆங்)::
10. திறமைக்கான பரிசு::
12. சிறிய கண்ணாடி குடுவை
14.கொட்டும் தன்மையுள்ள வண்டு
16.பின்னர்
18.பிரபல பின்னணி பாடகி
20.மானவர்கள் குழுவாக தங்குமிடம்
22. துயில் கொள்
24. அதிகப்படி
25. இமாசலப் பிரதேச  தலைநகர்
27.சேலையின் மேல்பகுதி

நெடுக்கு
1. பார்வதி தேவி, உமையாள்
2. பெண்ணே உன் பின்னே நோக்கின் வருவதிந்த ஈரசைச்சீரே
3. குட்டிப் பெண்
5. உறுதியான மரத்தை அதிகமாக சேமித்து வை
7. வட்டமாக சுழலும்படி நகர்த்துதல்
9. இதன் உள்ளே முத்து இருக்கும்
11.வீட்டில் வளர்க்கும் மூலிகைச் செடி
13.ஜென்மம்
15.விதை
17.கொண்டை
19. ஜார்க்கண்ட் தலைநகர்
21. நிலை; வியப்பு; பிரமிப்பு, மலைப்பு
23. ஒன்றுமில்லை
26.மே.இ.தீவு பேட்ஸ்மேனா, உலக அழகியா




பிகு1::
குறுக்கு 4, இலக்கியாவின் வலைப்பூவிலிருந்து. இனிவரும் எல்லா புதிர்களிலும் இவ்வாறு மூலம் சுட்டிக்காட்டுவது கடினமே. எனவே பிற புனைவர்கள் பெருந்தன்மையோடு மன்னிக்க. 


பிகு 2:
பிறிதொருநாளில் ஜாவா, அல்லது டப்பாக்கள் மூலம் ஆன்லைனில் தீர்க்கும் வசதி ஏற்படுத்தப்படும். 


பிகு 3:
இந்த கட்டங்களில் எழுத்துக்களை நிரப்பியது வெறும் ஐயாயிரம் வார்த்தைகளே தெரிந்த எனது மென்பொருளே. நானல்ல.

1 கருத்து:

  1. பதில்களை அனுப்பிய பூங்கோதை, ஸ்ரீதரன் மற்றும் விடுவித்துவிட்டதாகச் சொன்ன நண்பன் ஜேக்கப் இவர்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு