வியாழன், டிசம்பர் 08, 2011

கணித குறுக்கெழுத்து

கணிதம் என்றாலும் பயப்படாமல் களத்தில் இறங்குங்குபவர்களுக்கு பாராட்டுகள்!

எனது மற்ற புதிர்களை விட இது சற்று கடினமாக அமையலாம். இலக்கங்கள் (digits), கணம் (cube), வர்க்கம், வர்க்கமூலம் square root, பகா எண் prime number, மடங்கு muptiple, அடுக்கு power, வகுபடும் divides without reminder /படாது divides with reminder இவை தெரிந்திருந்தால் போதுமானது.


பார்த்தேன், பிடிக்கலை என்றாவது எனக்கு சொன்னீர்கள் என்றால் நான் சந்தோசப்படுவேன்


குறுக்கு

1. இரண்டாமிலக்கம் மற்ற இரு இலக்கங்களின் கூட்டுத்தொகை, எண் ஒரு வர்க்கம்.

4. குறுக்கு6 x 7
6. அனைத்து இலக்கங்களும் இரட்டை, ஒரு இலக்கம் இன்னொன்றின் மடங்கு
7. இரண்டு இலக்கங்களும் மூன்றால் வகுபடும், வேறு வேறு எண்கள்
8. ஏறுவரிசையில், சீரான இடைவெளியில் அமைந்த இலக்கங்கள்
10. ஒரு இரண்டின் அடுக்கு
11. ஏழின் மடங்கு
13. குறுக்கு 4 + குறுக்கு 6
15.  இந்த எண்ணால் குறுக்கு 8 ஐ வகுத்தால் மீதி 11
17.  கடைசி இலக்கம் முதலிரண்டு இலக்கங்களின் கூட்டுத்தொகை
19. பகா எண்
20. ஒரு இலக்கம் இன்னொரு இலக்கத்தின் இரு மடங்கு, இறங்கு வரிசையில் அமைந்துள்ள இந்த இலக்கங்களின் கூட்டுத்தொகை ஒரு வர்க்கம்.

நெடுக்கு:

2. முதலிரண்டு எண்களின் பெருக்குத்தொகையே கடையிரண்டு இலக்கங்கலாலான எண்
3. கடைசி இலக்கம் முதலிரண்டு எண்களின் கூட்டுத்தொகை.
4. கடைசி இலக்கம் முதலிரண்டு எண்களின் கூட்டுத்தொகை,  பத்தொன்பதால் வகுபடும் எண்.
5. மூன்றின் மடங்குகளாலான இலக்கங்களைக் கொண்ட ஒரு பாலின்ட்ரோம் (திருப்பிப்  பார்த்தாலும் அதே எண்).
9. ஒரு பகா எண்ணின் வர்க்கம்
10. ஒரு கண எண் + குறுக்கு 11
12. ஒரு கண எண்
13. குறுக்கு 4 க்கும் நெடுக்கு 12க்கும் இடைப்பட்ட ஒரு பகா எண்
14. 88 ஆல் வகுபடும்  பாலிண்ட்ரோம்.
16 பகா எண், இலக்கங்கள் அருகருகே அமைந்துள்ளன (வித்தியாசம் ஒன்று மட்டுமே).
18. பகா எண்



8 கருத்துகள்:

  1. குறுக்கு 7, குறுக்கு 8 (குறுக்கு 9 இல்லை), குறுக்கு 20 இவற்றில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நன்றி யோசிப்பவர், வைத்தியநாதன்.

    பதிலளிநீக்கு
  2. குறுக்கு 1 ற்கு வர்க்கங்களின் வரிசை http://en.wikipedia.org/wiki/Square_number#Examples பார்க்கவும். இரண்டுதான் தேறும் 121, 484.

    குறுக்கு 8 தான் ஸ்டார். இது 12345 லிருந்து 56789 ஆகவோ, 13579 ஆகவோ அமையலாம். கடைசி எண் 3 ஆல் வகுபடுவதாக அமைய வேண்டும். நடு எண் ஒரு பகா எண்ணின் வர்க்கமாக அமைய வேண்டும். இதோடு நெடுக்கு 3, குறுக்கு 10 சேர்த்து பார்த்தால் எல்லாம் ஒரே சமயத்தில் விடுபடும்.

    பதிலளிநீக்கு
  3. குறுக்கு: 1. 484 4. 434 6. 62 7. 39 8. 13579 10. 32 11. 35 13. 496 15. 848 17. 112 19. 37 20. 63
    நெடுக்கு: 2. 2612 3. 123 4. 437 5. 3993 9. 529 10. 378 12. 512 13. 489 14. 616 16. 43 18. 13

    மிகவும் ரசித்தேன். ச்ற்றே கடினமாக இருந்தது. சுமார் 2 மணி நேரம் எடுத்தது!

    பதிலளிநீக்கு

  4. முத்து சார், பதில் கரெக்டாத் தான் இருக்கும், பதிலை நான் பத்திரமா வைத்திருக்கவில்லை, இதுவரை நான் பதிலை பொதுவா வெளியிட்டதுமில்லை.



    நாகவேல் முழுசா முடிச்சாலே நீங்கள் ஸ்டார் தான். பதிலை அனுப்பிதான் சரிபார்க்க வேண்டிய புதிரில்லை இது. பதிலை அனுப்ப tony.yoogi என்ற எனது ஜி-மெயில் முகவரிக்கு அனுப்புங்கள், நான் இப்பொழுது tamil-puzzles.yoogi.com எனும் வலைதளத்திற்கு குடிபெயர்ந்துவிட்டேன்.

    அங்கே தினசரி குறுக்கெழுத்து பதியும் முயற்சியிலிருக்கிறேன், வந்து பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  5. முத்து, என் வேண்டுகோளை ஏற்று மீண்டுமொருமுறை புதிரை வந்து பார்த்தற்கு நன்றி, இந்த புதிரைப் பார்த்தவுடன் யோசிப்பவர் ஒரு கணக்குப் புதிர் போட்டார், அது இதைவிட வித்தியாசமகவும் இதே மாதிரியும் இருந்துச்சு, அதையும் போய்ப்பாருங்க, மறக்காம இதே போல ஒரு குறுக்கெழுத்து ரெடி பண்ணிவிடுங்க,

    பொதுவா நான் எல்லா புதிர்களையும் கணிணி மூலமாத்தான் போடுவேன், ஆனால் இந்தப் புதிரை கஷ்டப்பட்டு மூளையைக் கசக்க வேண்டியதாகப் போச்சு,

    பதிலளிநீக்கு