செவ்வாய், டிசம்பர் 06, 2011

குறுக்கெழுத்து 2.

முன்னர் சொன்னது போல இந்த குறுக்கெழுத்துக்கள் உங்களை அதிகம் யோசிக்க வைக்காது. இந்த முறை, பெரிய குறுக்கெழுத்து என்பதாக திட்டமிட்டேன்.வார்த்தைச் செறிவு அவ்வளவாக இருக்காது எனினும்  எல்லா வார்த்தைகளிலும் 50% க்கு குறையாத எழுத்துக்கள் இரண்டு வார்த்தைகளில் அமையும்.

 குறுக்கு

1. வால் இல்லா பெரிய குரங்கு (ஆங்)::
4.புன்னகை இளவரசி::
6. பொருள் மாறாமல், எழுத்து மட்டும் மாற்றம் பெற்று இருக்கும் நிலை ::
8.கூழாகவும் இல்லாமல், உதிரியாகவும் இல்லாமல் உள்ள நம் பாரம்பரிய உணவு.
9.மாமிசம் உண்ணாதவன் என திரும்பிப் பார்த்தால் திட்டு கிறான்::
11. மண விலக்குச் சொல்::
12.மூழ்கிய கப்பல், மூழ்காக் காதல் ஆங்கிலத் திரைப்படம்::
13.கட்டுப்பாட்டுக்குள் வருதல்::
14. எட்டுப்படி கொண்ட தானிய அளவு; மரக்கால் ::
15.கல்கியின் புதினம்::
18.சிவன் மீதே அம்பு விட்டவன்
20.பயந்து, பதுங்கு::
21.செல்பேசியை இந்தியாவில் அதிகம் விற்கும் நிறுவனம்::
23.ஆரம்பக்கல்வி பாடங்களில் ஒன்று::
24. உண்பது, உதட்டின் மேலிருப்பது  ஆகிய இது இரண்டிற்கும் ஆசை வைக்கமுடியாதாம் (2,2).::
26.இவரோடு ஐவரானோம் என ராமன் சிறப்பித்தவர்
28.எண்ணினார், சிந்தித்தார், நினைத்தார்::
29.பணியாள்::
32.மிகச் சிறிய அளவு::
34.ஆடையில் உள்ள ஒட்டை::
36. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் குள குளியல்::
40.கஷ்டப்படு, அல்லாடு::
41. வழிபாடு, பிரார்த்தனை ::
42.நீங்கு, தள்ளிப் போ. தூரத்திலிரு::
44.வீட்டைக் காப்பது, அதை திறப்பது(3,2)::
46. கானல் நீர்
47.பருப்பு, தயிர் கடையும் சமையலறை பொருள்::
48.தன்னலம் போற்றுபவர்(2,3)::
51சுற்றி வருதல்::
52.சிறிய பணம்::
53.முன்னே உள்ள  அஃறினை பொருளை சுட்டிக் காட்டுதல்::
54.நஞ்சு ::
55. குறுக்கு 18 ::
56.கூறுதல் சொல்லுதல்,பாராட்டுதல் அல்ல, ::

நெடுக்கு
1.இருபொருள் பட கருத்தாடும் முறை ::
2.நில உரிமைச் சான்று::
3.கண்ணாடியின் முக்கிய மூலப்பொருள்::
4.சிறு ஆண் குழந்தை::
5.பாணபட்டரின் நூல்::
6.மூன்று பக்கமும் தினறி பேசு,அல்லாடு::
7. நல்ல காரியம் செய்தவன், அதிருஷ்டசாலி ::
8.ஒரு நாட்டின் இயற்கை வளங்களில் இவையும் ஒன்று::
10.கஷ்டமில்லா நிலை, குறைவில்லா நிலை::
16.குந்துமணி, சுருக்கமாக, ஆனால் எழுத்து நடையில் சரியாக::குறைந்து::
17.புதிய - வின் எதிர்ச்சொல்::
19.சந்தோஷம் கொள், அக்களி::
21.பார்க்க, காண்க:: கனகவேல் காக்க, நொடியில் _____::
22.வரி, வட்டி, ___::
23.சோறு, சமைத்த உணவு (பழந்தமிழ்)::
24.ஆமை வடிவம்
25.சிவனை வழிபடுவோர்::
27. கனவு கண்டது பார்த்திபன். காண வைத்தவர் இவர்
30.அட்டாலி, மேல் தட்டு::
31.வசை::
32.சின்ன வயசு பொண்டாட்டி, (3,3)::
33.சவுபாக்கிய யோகம், அதிக தனம்:: (2,4)
35.எல்லா, அனைத்து::
37.தங்கத் தூய்மைக்கான அளவீடு::
38.’சுத்திகரிக்கப்படாத’ எண்ணெய் ::
39.அடுக்குத்தொடரான தாய், பாட்டியாகிறாள்::
42. விரகம் துன்பம் பாதி பாதி விரவி நின்ற அமைச்சன்((::சங்))::
43. குறும்புச் செயல்; குறும்புத்தனம் ::
44.சோலை::
45.விதை::
49.நன்றி 'தெரிவி'::
50.அதிகமாகிவிடல்::

1 கருத்து:

  1. குறுக்கு 56, நெடுக்கு 32,33 ஆகியவை தவறு திருத்தப்பட்டுள்ளன. தவறுக்கு வருந்துகிறேன். பூங்கோதைக்கு சிறப்பான நன்றிகள்.

    பதிலளிநீக்கு