வியாழன், அக்டோபர் 11, 2012

புதிய ஆத்திச்சூடியில் ஒரு வரி - விளக்கம்.


Take a breath.

Every 3.6 seconds, or the time from one breath to the next, someone in this world dies from hunger. That's 24,000 deaths a day, or over 8 and a half million deaths a year. These deaths are mostly children.

1 in 7 people of this world live in chronic hunger, which is defined as not having a single day of one's life receiving adequate nutrition. That's the same number of people that live in the world's developed nations.

In my hands are (see pic http://www.flickr.com/photos/krislitman/493626935/ ) 3 ounces of rice. The average person living in chronic hunger receives only this amount of food...daily.

The fact is that we have a bountiful God, and it would be funny if it were not so sad that God has given us an earth capable of feeding every human a daily diet of 3,500 calories in grains alone. That's enough to make everyone fat. The sadness is that people still die from hunger.

The United Nations knows this. Our governments' leaders know this. We have the distribution know-how to feed everyone. What is lacking is the moral courage of the people to say this is an injustice.

As a Christian, I must remember that I pray for our daily bread, not my daily bread. I must fight the temptation to construct a life where the poor are absent, and I must not submit to a theology that makes me comfortable in a world where the poor are invisible. When I do not recognize the faces of the hungry as my brothers and sisters, and when I do not stand up to be the voice for those whose cries go unheard, how sadly ironic it is that I follow the petition to give us this day our daily bread with a request to be forgiven of my sins.

வியாழன், செப்டம்பர் 13, 2012

புது தளத்திற்கு போயாச்சு,

அன்பு நண்பர்களே, புதிர் ஆர்வலர்களே, என் வலைதள பின் தொடர்பவர்களே, (ஆமாங்க ஒரு பாலோயர் இருந்தாங்க) இந்தத் தளத்தில் பதிவிட்டுக்கொண்டிருந்த நான் என் சொந்தத் தளத்திலேயே தமிழ்ப்புதிர்களை பதிவிடுகிறேன், அதுல சில பல சிரமங்கள் இருந்தாலும் அங்கே வாருங்கள் தமிழ் புதிர்கள், தினசரி குறுக்கெழுத்து http://tamil-puzzles.yoogi.com தொடர்ந்து ஆதரவளிப்பதற்கு நன்றி தற்போது ஒரு புதிய ஆண்டிராய்டு கேம் போட்டிருக்கிறேன், முடிந்தால் முயற்சிக்கவும். Liquid Sort Puzzle game for android mobiles https://yoogi.com/liquid-sort/

சனி, மார்ச் 17, 2012

குறுக்கெழுத்து -

குறுக்கெழுத்து

இந்த குறுக்கெழுத்தை ஆன்லைனிலேயே தீர்க்கலாம். "புதிர்", என தட்டச்சு செய்ய வேண்டுமானால் "puthir" என்பதை தட்டச்சு செய்யவேண்டும் (ஒருவேளை ஏதேனும் தமிழ் தட்டச்சு மென்பொருள் விசைப்பலகை பயன்படுத்தினால் அதை ஆப் செய்துவிடுங்கள்). ஒரு கட்டத்தை கிளிக்கினால், அங்கே தட்டச்சு செய்யலாம். குறுக்கு நெடுக்கு திசை மாற்ற கட்டத்தை இன்னொருமுறை கிளிக் செய்யுங்கள். விளையாடி மகிழுங்கள். ஆன்லைன் தீர்ப்பது பற்றி கருத்துக்களை puthirmayamgmailcom. எனும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். புதிர் பற்றிய கருத்துகளை, இங்கேயே கமெண்ட் இடுங்கள்

வார்த்தை நீளம் சில வார்த்தைகளுக்கு தராமலிருந்தது சரிசெய்யப்பட்டுவிட்டது.

குறுக்காக:
2.விருந்தோம்பலின் முதல்நிலை
5.தனக்கு வந்தால் தான் தெரியும் முதல் வேதனைக்குப் பின் வருவது
6.புனிதப்படுத்து என ஆலோசனை சொல்பவர்
8.அம்பி கரம் சேர்த்து தொழுத தெய்வம்
9.அடி பெண்ணே எவரென்று சொல்
10.வானின்று வந்த ஒன்று வில்லுக்குள் வைத்த விழி திருப்பியது
12.வேறு கிரீடம் அலங்கரிப்பவன் நான்கு வகையானவன்
14.உழக்காவது மிஞ்சும்படி பார்க்கத் தெரியாத கணக்கர்
15.விழிப்பு கல்வியோடு இதுவும் வேண்டுமாம் ஆள்வதற்கு

நெடுக்காக:
1.அதி புத்திக்கான பரிசு
2.கண்ணில் இது இருந்தால் கனவுகள் வருவதில்லை
3.தேவை போதாது
4.கமல் நடித்த இளிச்சவாயன்(4,4)
5.ஆயிரங்கால பயிரில் அதிருசி உணவு(4,4)
7. காசு யாரில் இருக்கும்
8.நாக்கின் கீழ்ப்பகுதி
11.விருப்பு ஈர்ப்பு
13.வால் நறுக்கிய விதம் பற்றிய சர்ச்சை
14.பார்வதி
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

செவ்வாய், பிப்ரவரி 21, 2012

வழிமொழி

மக்களே, கலைமொழியை விட எளிமையாக உள்ள புதிரே வழிமொழி. வட்டமிட்ட எழுத்தில் ஆரம்பித்து, எட்டுத் திக்குகளில் ஏதேனும் ஒன்றில் பயணித்து அனைத்து எழுத்துள்ள கட்டங்களையும் தொட்டு வந்தால் ஒரு சொற்றொடர்/பத்தி பதிலாக வரும். எளிதாக உள்ள இதை இன்னும் எளிதாக்க கீழே கட்டங்கள் கொடுத்துள்ளேன், அதை வைத்து அடுத்த வார்த்தை என்ன அளவு என்று அறிந்துகொள்ளலாம். அதிலேயே தட்டச்சும் செய்யலாம்.


























குட்டிக் குறுக்கெழுத்து

குட்டி

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.மண், அழுக்கு நீர்
4.வாசல் அடைத்த பலகை கலைத்த தகுதி
6.பெரிய செடி
7.புதிரில் பாதி உங்களுக்குப் பிடிக்காதே
8.இவன் ஓடினால் கையில் தாங்குவார்கள், சும்மா நின்றால் பார்க்க மாட்டார்கள்
10.துள்ளி ஓடும் ஓடையின் ஒரம் ஒற்றை மழைநீர்
11.பூமி, வையகம், நிலம்
13.சில்லறை, உடைந்த துண்டு
15.ராஜேஷ்குமாருக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்
17.பர்பி சின்னதுதான், ஆனா ருசி ஒட்டிக்கொள்ளும்
19.சடைச்சி கையோடு வந்த தலைமுடி
20.முயலை விட்டுட்டு இவனைத் தாக்கச்சொல்கிறது இரண்டு

நெடுக்காக:
2.மலையாளியின் கலை அங்கத களிம்பு செய்வதில் தெரியும்
3.களவாடியவள்
4.அதில்லாமல் முதல் முதல் ரவி வரைந்ததே சிறப்பு
5.உடும்பின் தலை மாற்றிய சொந்தம்
9.சிறு கோட்டைக்கா வல்லிய அரண்?
10.தனியே விடாது கூட வந்த பெண்
12.விரிந்து பரந்த, பெரிய
13.சாறு விட்டது
14.கடாபி நாட்டு உப்பிலி யார் நடுவே உலைத்துப்பார்
16.அன்பில்லா அவள் சுற்றிக் காட்டும் சிலை கனவே
18.வயிற்றில் வளரும் உறுப்பு
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

வியாழன், பிப்ரவரி 09, 2012

சொல்லாங்குழி - மூன்றெழுத்து

சொல்லாங்குழியை தமிழ் கூறும் நல்லுலகிற்கு முதன் முதல் அறிமுகப்படுத்தியது பூங்கோதை. அவரது தளத்தில் சொல்லாங்குழி விதிகளை பார்த்துக்கொள்ளுங்கள்.




விதிகள்::

மறைந்துள்ள வார்த்தையை நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும். அதற்காக சில குறிப்புகளை கேள்விவார்த்தை/அதன் எழுத்துக்களின் இடத்தை பொறுத்து பூ/காய்/கனி என குறிப்புகள் தரப்படும்.

உயிர் ( ஃ உள்ளாக) – ஒரு வருக்கம், ஒவ்வொரு உயிர்மெய் வரிசையும் ஒரு வருக்கம்.
க வருக்கம் என்பதை க” என்று சுருக்கமாக இனி எழுதுவோம்.

க” – க,கா,கி,கீ,கு,கூ,கெ,கே,கை,கொ,கோ,கௌ,க்
அ” – அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ,ஃ
ன” – ன,னா,னி,னீ,னு,னூ,னெ,னே,னை,னொ,னோ,னௌ,ன்

கனி – சரியான எழுத்து சரியான இடத்தில் வந்தால்.
காய் – வருக்கத்தில் வேறு எந்த எழுத்தாவது (சரியான எழுத்து தவிர) சரியான இடத்தில் வந்தால் .
பூ – வருக்கத்தில் (சரியான எழுத்து உட்பட) எந்த எழுத்தாவது தவறான இடத்தில் வந்தால்.

இந்த குறிப்புகளைக்கொண்டு எந்த வார்த்தை மறைந்துள்ளது எனக்கண்டுபிடியுங்கள். (மாஸ்டர் மைன்ட் போல)

(என் வலைப்பூவில் உள்ள புதிர்கள் உயிர், மெய், உயிர்மெய் சேர்த்த தூய தமிழ் எழுத்துகள் உடையவை மட்டுமே. வடமொழி எழுத்துகள் இல்லை.)

புதிர்-1.
பதர்:: கனி - -
ஈரம்:: கனி காய் -

புதிர்-2.
தவிர் : - காய் -
ஆகும்: - காய் காய் -

புதிர்-3
மலடு : கனி - பூ
சாமம் : - காய் -

புதிர்-4
ஆயர் : பூ
கவிழ் : கனி - பூ
தரவு : காய் காய்
புதிர்-5.
இவர்:: கனி
அத்தை:: கனி பூ


எச்சம் விகுதி இல்லாத வார்த்தைகள், அதாவது மேகம் என்று தான் இருக்கும், மேக, மேகமே என்றெல்லாம் இருக்காது.

இங்கு இருக்கும் சில சொல்லாங்குழி புதிர்கள் சோதனை முயற்சி, இதில் ஏதேனும் தவறிருந்தால் சொல்லவும். கேள்வி/கணை சொற்கள் முடிந்தவரை குறைவாக தயாரித்துள்ளேன், (வழக்கம் போல கணிணி உதவியுடன்) .

புதன், ஜனவரி 04, 2012

யோசிங்க - கேள்வி 1-9

யோசிங்க (யோசிப்பவரின் வலைப்பூ) வில் பார்த்த புதிரின் விடைய வச்சு ஒரு பிண அறுவை.

(புதிர் இது தான்) 1லிருந்து 9வரையிலான வெவ்வேறு எண்கள், முதல் இரு இலக்கங்களாலான எண் 2ஆல் வகுபடும். முதல் மூன்று இலக்கங்களாலான எண் 3 ஆல் வகுபடும்,.....



எப்படியும் ஐந்தால வகுபடும் எண் 0 / 5 ல் தான் முடியனும். அதனால நடுவுல 5 போடு.

xxxx5xxxx

இப்ப இரண்டால வகுபடும் எண்கள் எல்லாம் இரட்டை எண்களால் முடியனும். அத நாம A னு குறிப்போம், அப்ப ஒத்தப்படை எல்லாம் B,

baba5abab

நான்கால் வகுபடும் எண்கள் எல்லாம் கடைசி இரண்டு இலக்கத்தில தெரிஞ்சுடும். (04,08,12,16,20,....). அதுலயும் முன்ன வருவது ஒத்தப்படை'னா அது 2, 6 னு தான் முடியனும்.

எனவே bab(2/6)5abab

அதே போல 8 ஆல் வகுபடுவது இரட்டை-ஒத்தை-இரட்டை னு வர்றப்ப 2/6 அப்படிதான் இருக்கும்,

bab(2/6)5ab(2/6)b

b (4/8) b (2/6) 5 (4/8) b (2/6) b

இதுல எளிமையான விதி மூன்றால் வகுபடுவது பார்த்தால்

147,345,543,549,741,945,183,189,381,387,783,981

பார்க்க நிறைய எண்கள் மாதிரி தெரியலாம்.
504 காம்பினேஷன்ல ஒரு 12 மட்டும் வடிகட்டியாச்சு.

அடுத்த இலக்கம் 2/6 சேர்த்தால் 24 காம்போ,
அடுத்து ஐந்து அப்படியே.

ஆறாமிலக்கம், 4 சேர்த்திருந்தா 8, 8 சேர்த்திருந்தா நாலு. அதனால 24 காம்போ அப்படியே,

இந்த ஆறிலக்க எண் ஆறால் வகுபடுமானு பார்க்கனும்.
அத்ற்கும் மூனால் வகுபடுமாங்கறது தான் கேள்வி. 4-8 இரண்டுமே வரும், 5 ம் வரும். எனவே 17 + மாறி மாறி வரும் எண்கள்.

147 ல் 1,7,2/6 + 17 தான் கேள்வியே.
147256 சரி
345256 சரி. இந்த பிராசஸ்ல மறுபடியும் 12 காம்போ ஆகிடும்.
இது 60800 ல 12.

அத ஏழோடு சேர்த்துப் பார்த்தா ஒண்ணுதான் தேறும், சரியா யோசிப்பவரே.
மண்டை காயுது, இதோட நான் விட்டுடறேன்.

திங்கள், ஜனவரி 02, 2012

கட்டம் கட்டி யோசிங்க

ஆங்கிலத்தில் இந்த வகைப்புதிர்கள் ;logic grid puzzles' எனப் பிரபலம். தமிழில் அடியேனின் முயற்சி. இது மிக எளிதான புதிரே.

இளமதி சென்ற பிறந்தநாளுக்கு நான்கு தோழியரைக் கூப்பிட்டிருந்தா.. நாலு பேரும் நாலு பரிசுகளைக் கொண்டுவந்து கொடுத்தாங்க. நம்ம இளமதிக்கு ஞாபக மறதி ஜாஸ்தி, அதனால அவ யார் என்ன கொண்டுவந்தாங்கனு மறந்திட்டா. அவளுக்கு ஞாபகம் இருக்கறதை அவளே சொல்றா நீங்க கண்டுபிடிங்களேன்.

தோழிகள்:: கனிமொழி, மணிமொழி, தேன்மொழி, அருள்மொழி:
பரிசுப்பொருட்கள்::பேனா, சேலை,புத்தகம், ஆரம்,
வண்ணங்கள்::சிவப்பு, மஞ்சள், பச்சை,நீலம்

1.மணிமொழிக்கு வாசிப்பில் ஈடுபாடில்லை. எனவே அவள் புத்தகம் வாங்கவில்லை. மேலும் எனக்கு சிவப்பு வண்ணம் பிடிக்குமாகையால், அவள் சிவப்பு வண்ண தாளிலேயே பரிசளித்தாள்.
2.ஆடை வாங்கிய கடையில் பச்சை வண்ண பரிசுத்தாள் மட்டுமே இருந்ததாக நான்கு பேரில் ஒருத்தி சொன்னாள்
3.தேன்மொழிக்கு ஒரு தோழி ஆரம் வாங்கியதும் தெரியும். மற்ற இருவர் பச்சை, மஞ்சள் வண்ண பரிசுத்தாள்களின் கொண்டுவருவதும் தெரிந்ததால் இது எதையும் அவள் செய்யவில்லை
4.அருள்மொழிக்கு நான் கவிதை எழுதுவேன்னு தெரிந்ததால் அவள் பேனா வாங்கினாள்

இந்த குறிப்புகளை வைத்து கீழே உள்ள கட்டங்களில் x (தவறு) , அல்லது V (சரி) எனக் குறித்துக்கொண்டீர்கள் என்றால் எளிதாக இருக்கும்.



பின்குறிப்பு::
கண்டுபிடிக்காதவர்களுக்கு இளமதியின் கவிதை கட்டாயப்பரிசாக அனுப்பிவைக்கப்படும்.