திங்கள், ஜனவரி 02, 2012

கட்டம் கட்டி யோசிங்க

ஆங்கிலத்தில் இந்த வகைப்புதிர்கள் ;logic grid puzzles' எனப் பிரபலம். தமிழில் அடியேனின் முயற்சி. இது மிக எளிதான புதிரே.

இளமதி சென்ற பிறந்தநாளுக்கு நான்கு தோழியரைக் கூப்பிட்டிருந்தா.. நாலு பேரும் நாலு பரிசுகளைக் கொண்டுவந்து கொடுத்தாங்க. நம்ம இளமதிக்கு ஞாபக மறதி ஜாஸ்தி, அதனால அவ யார் என்ன கொண்டுவந்தாங்கனு மறந்திட்டா. அவளுக்கு ஞாபகம் இருக்கறதை அவளே சொல்றா நீங்க கண்டுபிடிங்களேன்.

தோழிகள்:: கனிமொழி, மணிமொழி, தேன்மொழி, அருள்மொழி:
பரிசுப்பொருட்கள்::பேனா, சேலை,புத்தகம், ஆரம்,
வண்ணங்கள்::சிவப்பு, மஞ்சள், பச்சை,நீலம்

1.மணிமொழிக்கு வாசிப்பில் ஈடுபாடில்லை. எனவே அவள் புத்தகம் வாங்கவில்லை. மேலும் எனக்கு சிவப்பு வண்ணம் பிடிக்குமாகையால், அவள் சிவப்பு வண்ண தாளிலேயே பரிசளித்தாள்.
2.ஆடை வாங்கிய கடையில் பச்சை வண்ண பரிசுத்தாள் மட்டுமே இருந்ததாக நான்கு பேரில் ஒருத்தி சொன்னாள்
3.தேன்மொழிக்கு ஒரு தோழி ஆரம் வாங்கியதும் தெரியும். மற்ற இருவர் பச்சை, மஞ்சள் வண்ண பரிசுத்தாள்களின் கொண்டுவருவதும் தெரிந்ததால் இது எதையும் அவள் செய்யவில்லை
4.அருள்மொழிக்கு நான் கவிதை எழுதுவேன்னு தெரிந்ததால் அவள் பேனா வாங்கினாள்

இந்த குறிப்புகளை வைத்து கீழே உள்ள கட்டங்களில் x (தவறு) , அல்லது V (சரி) எனக் குறித்துக்கொண்டீர்கள் என்றால் எளிதாக இருக்கும்.



பின்குறிப்பு::
கண்டுபிடிக்காதவர்களுக்கு இளமதியின் கவிதை கட்டாயப்பரிசாக அனுப்பிவைக்கப்படும்.

2 கருத்துகள்: