புதன், ஜனவரி 04, 2012

யோசிங்க - கேள்வி 1-9

யோசிங்க (யோசிப்பவரின் வலைப்பூ) வில் பார்த்த புதிரின் விடைய வச்சு ஒரு பிண அறுவை.

(புதிர் இது தான்) 1லிருந்து 9வரையிலான வெவ்வேறு எண்கள், முதல் இரு இலக்கங்களாலான எண் 2ஆல் வகுபடும். முதல் மூன்று இலக்கங்களாலான எண் 3 ஆல் வகுபடும்,.....



எப்படியும் ஐந்தால வகுபடும் எண் 0 / 5 ல் தான் முடியனும். அதனால நடுவுல 5 போடு.

xxxx5xxxx

இப்ப இரண்டால வகுபடும் எண்கள் எல்லாம் இரட்டை எண்களால் முடியனும். அத நாம A னு குறிப்போம், அப்ப ஒத்தப்படை எல்லாம் B,

baba5abab

நான்கால் வகுபடும் எண்கள் எல்லாம் கடைசி இரண்டு இலக்கத்தில தெரிஞ்சுடும். (04,08,12,16,20,....). அதுலயும் முன்ன வருவது ஒத்தப்படை'னா அது 2, 6 னு தான் முடியனும்.

எனவே bab(2/6)5abab

அதே போல 8 ஆல் வகுபடுவது இரட்டை-ஒத்தை-இரட்டை னு வர்றப்ப 2/6 அப்படிதான் இருக்கும்,

bab(2/6)5ab(2/6)b

b (4/8) b (2/6) 5 (4/8) b (2/6) b

இதுல எளிமையான விதி மூன்றால் வகுபடுவது பார்த்தால்

147,345,543,549,741,945,183,189,381,387,783,981

பார்க்க நிறைய எண்கள் மாதிரி தெரியலாம்.
504 காம்பினேஷன்ல ஒரு 12 மட்டும் வடிகட்டியாச்சு.

அடுத்த இலக்கம் 2/6 சேர்த்தால் 24 காம்போ,
அடுத்து ஐந்து அப்படியே.

ஆறாமிலக்கம், 4 சேர்த்திருந்தா 8, 8 சேர்த்திருந்தா நாலு. அதனால 24 காம்போ அப்படியே,

இந்த ஆறிலக்க எண் ஆறால் வகுபடுமானு பார்க்கனும்.
அத்ற்கும் மூனால் வகுபடுமாங்கறது தான் கேள்வி. 4-8 இரண்டுமே வரும், 5 ம் வரும். எனவே 17 + மாறி மாறி வரும் எண்கள்.

147 ல் 1,7,2/6 + 17 தான் கேள்வியே.
147256 சரி
345256 சரி. இந்த பிராசஸ்ல மறுபடியும் 12 காம்போ ஆகிடும்.
இது 60800 ல 12.

அத ஏழோடு சேர்த்துப் பார்த்தா ஒண்ணுதான் தேறும், சரியா யோசிப்பவரே.
மண்டை காயுது, இதோட நான் விட்டுடறேன்.

திங்கள், ஜனவரி 02, 2012

கட்டம் கட்டி யோசிங்க

ஆங்கிலத்தில் இந்த வகைப்புதிர்கள் ;logic grid puzzles' எனப் பிரபலம். தமிழில் அடியேனின் முயற்சி. இது மிக எளிதான புதிரே.

இளமதி சென்ற பிறந்தநாளுக்கு நான்கு தோழியரைக் கூப்பிட்டிருந்தா.. நாலு பேரும் நாலு பரிசுகளைக் கொண்டுவந்து கொடுத்தாங்க. நம்ம இளமதிக்கு ஞாபக மறதி ஜாஸ்தி, அதனால அவ யார் என்ன கொண்டுவந்தாங்கனு மறந்திட்டா. அவளுக்கு ஞாபகம் இருக்கறதை அவளே சொல்றா நீங்க கண்டுபிடிங்களேன்.

தோழிகள்:: கனிமொழி, மணிமொழி, தேன்மொழி, அருள்மொழி:
பரிசுப்பொருட்கள்::பேனா, சேலை,புத்தகம், ஆரம்,
வண்ணங்கள்::சிவப்பு, மஞ்சள், பச்சை,நீலம்

1.மணிமொழிக்கு வாசிப்பில் ஈடுபாடில்லை. எனவே அவள் புத்தகம் வாங்கவில்லை. மேலும் எனக்கு சிவப்பு வண்ணம் பிடிக்குமாகையால், அவள் சிவப்பு வண்ண தாளிலேயே பரிசளித்தாள்.
2.ஆடை வாங்கிய கடையில் பச்சை வண்ண பரிசுத்தாள் மட்டுமே இருந்ததாக நான்கு பேரில் ஒருத்தி சொன்னாள்
3.தேன்மொழிக்கு ஒரு தோழி ஆரம் வாங்கியதும் தெரியும். மற்ற இருவர் பச்சை, மஞ்சள் வண்ண பரிசுத்தாள்களின் கொண்டுவருவதும் தெரிந்ததால் இது எதையும் அவள் செய்யவில்லை
4.அருள்மொழிக்கு நான் கவிதை எழுதுவேன்னு தெரிந்ததால் அவள் பேனா வாங்கினாள்

இந்த குறிப்புகளை வைத்து கீழே உள்ள கட்டங்களில் x (தவறு) , அல்லது V (சரி) எனக் குறித்துக்கொண்டீர்கள் என்றால் எளிதாக இருக்கும்.



பின்குறிப்பு::
கண்டுபிடிக்காதவர்களுக்கு இளமதியின் கவிதை கட்டாயப்பரிசாக அனுப்பிவைக்கப்படும்.