செவ்வாய், அக்டோபர் 11, 2011

குறுக்கெழுத்து மென்பொருள் வடிவமைப்பதில் உள்ள சிக்கல்கள்

குறுக்கெழுத்து புதிர்களை தமிழில வடிவமக்க முயற்சி செய்துகொண்டிறுக்கிறறேன். இம் முயற்சி கடினமாகவே உள்ளது. அதற்கான காரணங்களை பட்டியலிட்டிருக்கிறேன்.

  1. தமிழ் சொற் பட்டியல்::  ஒரு குறுக்கெழுத்து மென்பொருள் எழுத வேண்டும் என்றால், அதற்கு ஒரு சொற்தொகுப்பு வேண்டும். தமிழ் விக்சனரியில் உள்ள சொற்கள் நடைமுறை தமிழில் இருந்து பெரும்பாலும் மாறுபட்டிருக்கிறது. - இதன் தீர்வாக விக்சனரி அமைந்துள்ளது.
  2. தமிழ் விசை பலகை. இப்பொழுதுதான் தமிழில் "டைப்"  செய்வது எவ்வளவு கடினம் என்பது தெரிகிறது. இதற்கு இ-கலப்பை மென்பொருள்ஒரு சிறந்த தீர்வாக அமைந்துள்ளது.  
  3. யுனிகோடு :  யுனிகோடு / கனிணி எழுத்துக்களுக்கும் தமிழ் எழுத்துக்களுக்கும் ஒரு "mapping" செய்துகொள்ள வேண்டி உள்ளது. இதை நானே எழுதிக்கொண்டேன். 
  4. குறுக்குக் கட்டங்களில் எழுத்துக்கள் இபிஎஸ் வடிவிலேயே இதுவரை எனது புதிர்களை வடிவமைத்திருக்கிறேன். இந்த இபிஎஸ் யுனிகோடு வடிவை ஆதரிப்பதில்லை. TSCII அல்லது பாமினி ஃபான்ட் கொண்டு இப்பிரச்சினைய தீர்க்க முயலவேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல.இபிஎஸ் ASCII யிலேயே, சிறப்பு எழுத்துக்களை ஒரு கோர்வயில் (string) பயன்படுத்த அனுமதிப்பதில்லை.  எனவே. இப்போதைக்கு கேள்வி எண்கள் மட்டுமே குறுக்குக் கட்டங்களில். விடைகள், சொற்பட்டியலாக என்று சமரசம் செய்துகொண்ட்ட்விட்டேன்.
  5. கேள்விகள்: கேள்வி கேட்பது எளிது போல் தான் தோன்றியது இலக்கியாவின் வலைப்பூவைக் கானும் வரை. அருமையாக வடிவமைக்கிறார் அவரது குறுக்கெழுத்துக் கேள்விகளை. நான் ஒரு வாரமாக மாரடித்து தூக்கம் கெட்டு எழுதிய 1400  கேள்விகள் இப்பொழுது என்னைக் கேலியாக பார்க்கின்றன. பன்றி பல குட்டி என்று. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக