ஞாயிறு, அக்டோபர் 30, 2011

யுரேகா, யுரேகா.தமிழ் குறுக்கெழுத்து இதோ.

தீபாவளிக்கு முன் தினம் எனது "யுரேகா" கணத்தை அனுபவித்தேன். எனக்கு இன்னும் எனது முதல் "program" பசுமையாக நினைவில் இருக்கிறது. சுமார் 12 வ்ருடங்கள் கழித்தும் அதே போன்ற பின்னிரவு. அதே லப்-டப் கணங்கள். அதே தூக்கமில்லா மகிழ்ச்சித் தருணம்.


தமிழில் அருமையாக குறுக்கெழுத்துக்கள் அமைகின்றன.கீழிருக்கும் படங்கள் நான் செய்த சில குறுக்கெழுத்துக் கட்டங்களின் மாதிரி. (எழுத்துக்களை இன்னும் உள்ளே எழுதும் வித்தை கற்கவில்லை. யுனிக்கோடு, இபிஎஸ் என ஏகப்பட்ட தொல்லை)

மார்கழி முதல் (இனிமே தமிழ் நிறைய பேசனும், எழுதனும்.) இந்த வலைப்பூவில் வாரம் ஒரு தமிழ் குறுக்கெழுத்து    புதிதாக பதியலாம் என உள்ளேன்.

 இந்நாள் வரை வெறும் 30 - 40 எழுத்துக்களைக் கொண்ட மொழிகளிலேயே crossword அமையும் என நினைத்திருந்தேன். நான் ஆங்கில குறுக்கெழுத்துக்கள் வடிவமைக்கும் மென்பொருளை ஏற்கனவே வடிவமைத்திருக்கிறேன்.அது எவ்வளவு எளிது என்றால், அன்றிரவு எனது மனம் துள்ளவில்லை. எனது "Coded -Corssword  shareware"  download செய்தீர்களானால், ஆங்கில புதிர்களை பார்க்கலாம்.


ஆனால், இப்படி, ஒரு "symmetrical" வடிவிலான குறுக்கெழுத்து தமிழில் பார்ப்பது இதுவே முதல் முறை (எனக்கு, உங்களுக்கும் என நினைக்கிறேன்)

. வெறும் 10,000 சொற்கள் மட்டுமே உள்ள ஒரு பட்டியல் கொண்டு குறுக்கெழுத்து வடிவமைத்து விட்டேன். ஆனால் சொற்கள் பல நமது வழக்கத்தில் இல்லாத சொற்களாக இருக்கின்றன. அதை நினைக்கும் போதுதான் கவலையாக இருக்கிறது. ஒருவேளை இந்த குறுக்கெழுத்து  மூலம் இச்சொற்கள் மீண்டும் கவனிக்கப்படுமோ?

வாரமலர் மட்டுமே நான் குறுக்கெழுத்து பார்த்த பத்திரிகை. (குமுதத்தில் எப்போதாவது. யாரந்த GSS?). வேறு ஏதேனும் பத்திரிகைகளில் குறுக்கெழுத்து வருகிறதா என தெரியவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.


சில வழக்கொழிந்த சொற்கள் உங்கள் பார்வைக்கு

ஈம்
தாழிசை
விறிசு

பூநெய்
குசினி
காசினி

சாகாடு
சுருளை

உலாவி-இது வழக்கில் அதிகம் பிரபலமாகாத அன்மைக் காலத்திய சொல்
உமாமி
கதிரை
வானோடி

நல்கை
அடுவல்
அங்கக
அவகாசி



இந்த சொற்களில் 4க்கு மேல் உங்களில் யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டமிடுங்கள். சரியா என்று பார்க்கலாம்.


2 கருத்துகள்: