வெள்ளி, டிசம்பர் 23, 2011

கலைமொழி - 2.

யோசிப்பவரின் உழைப்பால் இந்த புதிருக்கு வரவேற்பு அதிகரித்திருக்கிறது. ஆன்லைனில் உருவாக்குவதும் தீர்ப்பதும் எளிதாகியுள்ளது. இந்த கிறிஸ்துமஸ் வேளையில் அதனையொட்டிய ஒரு செய்தி இந்த புதிரில். இம்முறை கொஞ்சம் பெரிதாகவே. குறிப்பாக இதனை முன்னரே படித்திராதவர்களுக்கே இப்புதிர் சுவராசியமாக அமையும்.

வியாழன், டிசம்பர் 08, 2011

கணித குறுக்கெழுத்து

கணிதம் என்றாலும் பயப்படாமல் களத்தில் இறங்குங்குபவர்களுக்கு பாராட்டுகள்!

எனது மற்ற புதிர்களை விட இது சற்று கடினமாக அமையலாம். இலக்கங்கள் (digits), கணம் (cube), வர்க்கம், வர்க்கமூலம் square root, பகா எண் prime number, மடங்கு muptiple, அடுக்கு power, வகுபடும் divides without reminder /படாது divides with reminder இவை தெரிந்திருந்தால் போதுமானது.


பார்த்தேன், பிடிக்கலை என்றாவது எனக்கு சொன்னீர்கள் என்றால் நான் சந்தோசப்படுவேன்


குறுக்கு

1. இரண்டாமிலக்கம் மற்ற இரு இலக்கங்களின் கூட்டுத்தொகை, எண் ஒரு வர்க்கம்.

4. குறுக்கு6 x 7
6. அனைத்து இலக்கங்களும் இரட்டை, ஒரு இலக்கம் இன்னொன்றின் மடங்கு
7. இரண்டு இலக்கங்களும் மூன்றால் வகுபடும், வேறு வேறு எண்கள்
8. ஏறுவரிசையில், சீரான இடைவெளியில் அமைந்த இலக்கங்கள்
10. ஒரு இரண்டின் அடுக்கு
11. ஏழின் மடங்கு
13. குறுக்கு 4 + குறுக்கு 6
15.  இந்த எண்ணால் குறுக்கு 8 ஐ வகுத்தால் மீதி 11
17.  கடைசி இலக்கம் முதலிரண்டு இலக்கங்களின் கூட்டுத்தொகை
19. பகா எண்
20. ஒரு இலக்கம் இன்னொரு இலக்கத்தின் இரு மடங்கு, இறங்கு வரிசையில் அமைந்துள்ள இந்த இலக்கங்களின் கூட்டுத்தொகை ஒரு வர்க்கம்.

நெடுக்கு:

2. முதலிரண்டு எண்களின் பெருக்குத்தொகையே கடையிரண்டு இலக்கங்கலாலான எண்
3. கடைசி இலக்கம் முதலிரண்டு எண்களின் கூட்டுத்தொகை.
4. கடைசி இலக்கம் முதலிரண்டு எண்களின் கூட்டுத்தொகை,  பத்தொன்பதால் வகுபடும் எண்.
5. மூன்றின் மடங்குகளாலான இலக்கங்களைக் கொண்ட ஒரு பாலின்ட்ரோம் (திருப்பிப்  பார்த்தாலும் அதே எண்).
9. ஒரு பகா எண்ணின் வர்க்கம்
10. ஒரு கண எண் + குறுக்கு 11
12. ஒரு கண எண்
13. குறுக்கு 4 க்கும் நெடுக்கு 12க்கும் இடைப்பட்ட ஒரு பகா எண்
14. 88 ஆல் வகுபடும்  பாலிண்ட்ரோம்.
16 பகா எண், இலக்கங்கள் அருகருகே அமைந்துள்ளன (வித்தியாசம் ஒன்று மட்டுமே).
18. பகா எண்



புதன், டிசம்பர் 07, 2011

குறுக்கெழுத்து 2 (ஆன்லைன்)

குறுக்கெழுத்து-2

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.வால் இல்லா பெரிய குரங்கு (ஆங்)
4..புன்னகை இளவரசி
6.பொருள் மாறாமல், எழுத்து மட்டும் மாற்றம் பெற்று இருக்கும் நிலை
8..கூழாகவும் இல்லாமல், உதிரியாகவும் இல்லாமல் உள்ள நம் பாரம்பரிய உணவு
9.மாமிசம் உண்ணாதவன் என திரும்பிப் பார்த்தால் திட்டு கிறான்
11.மண விலக்குச் சொல்
12.மூழ்கிய கப்பல், மூழ்காக் காதல் ஆங்கிலத் திரைப்படம்::
13.கட்டுப்பாட்டுக்குள் வருதல்
14.எட்டுப்படி கொண்ட தானிய அளவு; மரக்கால்
15.கல்கியின் புதினம்
18.சிவன் மீதே அம்பு விட்டவன்
20.பயந்து, பதுங்கு
21.செல்பேசியை இந்தியாவில் அதிகம் விற்கும் நிறுவனம்
23.ஆரம்பக்கல்வி பாடங்களில் ஒன்று
24.இது இரண்டிற்கும் ஒருசேர ஆசை வைக்கமுடியாதாம் (2,2)
26.இவரோடு ஐவரானோம் என ராமன் சிறப்பித்தவர்
28.எண்ணினார், நினைத்தார்
29.பணியாள்
32.மிகச் சிறிய அளவு
34.ஆடையில் உள்ள ஒட்டை
36.பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் குள குளியல்
40.கஷ்டப்படு, அல்லாடு
41.வழிபாடு, பிரார்த்தனை
42.நீங்கு, தள்ளிப் போ. தூரத்திலிரு
44.வீட்டைக் காப்பது, அதை திறப்பது(3,2)
46.கானல் நீர்
47.பருப்பு, தயிர் கடையும் சமையலறை பொருள்
48.தன்னலம் போற்றுபவர்
51.சுற்றி வருதல்
52.சிறிய பணம்
53.முன்னே உள்ள அஃறினை பொருளை சுட்டிக் காட்டுதல்
54.நஞ்சு
55.குறுக்கு 18
56.பாராட்டுதல் அல்ல, கூறுதல், சொல்லுதல்

நெடுக்காக:
1.இருபொருள் பட கருத்தாடுவது
2.நில உரிமைச் சான்று
3.கண்ணாடியின் முக்கிய மூலப்பொருள்
4.சிறு ஆண் குழந்தை
5.பாணபட்டரின் நூல்
6.மூன்று பக்கமும் தினறி பேசு,மூச்சு திணறு
7.நல்ல காரியம் செய்தவன், அதிருஷ்டசாலி
8.ஒரு நாட்டின் இயற்கை வளங்களில் ___ வள ஒன்று
10.கஷ்டமில்லா நிலை, குறைவில்லா நிலை
16.குந்துமணி, சுருக்கமாக, ஆனால் எழுத்து நடையில் சரியாக
17.புதிய - வின் எதிர்ச்சொல்
19.சந்தோஷம் கொள், அக்களி
21.கனகவேல் காக்க, நொடியில் _____
22.வரி, வட்டி, ___
23.சோறு, சமைத்த உணவு (பழந்தமிழ்)
24.ஆமை வடிவம்
25.சிவனை வழிபடுவது
27.கனவு கண்டது பார்த்திபன். காண வைத்தவர் இவர்
30.அட்டாலி, மேல் தட்டு
31.வசை
32.சின்ன வயசு பொண்டாட்டி
33.சவுபாக்கிய யோகம், அதிக தனம் (2,4)
35.எல்லா, அனைத்து
37.தங்கத் தூய்மைக்கான அளவீடு
38.'சுத்திகரிக்கப்படாத’ எண்ணெய்
39.அடுக்குத்தொடரான தாய், பாட்டியாகிறாள்
42.விரகம் துன்பம் பாதி பாதி விரவி நின்ற அமைச்சன்(சங்)
43.குறும்புச் செயல்; குறும்புத்தனம்
44.சோலை
45.விதை
49.நன்றி 'தெரிவி'
50.அதிகமாகிவிடல்
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

செவ்வாய், டிசம்பர் 06, 2011

குறுக்கெழுத்து 2.

முன்னர் சொன்னது போல இந்த குறுக்கெழுத்துக்கள் உங்களை அதிகம் யோசிக்க வைக்காது. இந்த முறை, பெரிய குறுக்கெழுத்து என்பதாக திட்டமிட்டேன்.வார்த்தைச் செறிவு அவ்வளவாக இருக்காது எனினும்  எல்லா வார்த்தைகளிலும் 50% க்கு குறையாத எழுத்துக்கள் இரண்டு வார்த்தைகளில் அமையும்.

 குறுக்கு

1. வால் இல்லா பெரிய குரங்கு (ஆங்)::
4.புன்னகை இளவரசி::
6. பொருள் மாறாமல், எழுத்து மட்டும் மாற்றம் பெற்று இருக்கும் நிலை ::
8.கூழாகவும் இல்லாமல், உதிரியாகவும் இல்லாமல் உள்ள நம் பாரம்பரிய உணவு.
9.மாமிசம் உண்ணாதவன் என திரும்பிப் பார்த்தால் திட்டு கிறான்::
11. மண விலக்குச் சொல்::
12.மூழ்கிய கப்பல், மூழ்காக் காதல் ஆங்கிலத் திரைப்படம்::
13.கட்டுப்பாட்டுக்குள் வருதல்::
14. எட்டுப்படி கொண்ட தானிய அளவு; மரக்கால் ::
15.கல்கியின் புதினம்::
18.சிவன் மீதே அம்பு விட்டவன்
20.பயந்து, பதுங்கு::
21.செல்பேசியை இந்தியாவில் அதிகம் விற்கும் நிறுவனம்::
23.ஆரம்பக்கல்வி பாடங்களில் ஒன்று::
24. உண்பது, உதட்டின் மேலிருப்பது  ஆகிய இது இரண்டிற்கும் ஆசை வைக்கமுடியாதாம் (2,2).::
26.இவரோடு ஐவரானோம் என ராமன் சிறப்பித்தவர்
28.எண்ணினார், சிந்தித்தார், நினைத்தார்::
29.பணியாள்::
32.மிகச் சிறிய அளவு::
34.ஆடையில் உள்ள ஒட்டை::
36. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் குள குளியல்::
40.கஷ்டப்படு, அல்லாடு::
41. வழிபாடு, பிரார்த்தனை ::
42.நீங்கு, தள்ளிப் போ. தூரத்திலிரு::
44.வீட்டைக் காப்பது, அதை திறப்பது(3,2)::
46. கானல் நீர்
47.பருப்பு, தயிர் கடையும் சமையலறை பொருள்::
48.தன்னலம் போற்றுபவர்(2,3)::
51சுற்றி வருதல்::
52.சிறிய பணம்::
53.முன்னே உள்ள  அஃறினை பொருளை சுட்டிக் காட்டுதல்::
54.நஞ்சு ::
55. குறுக்கு 18 ::
56.கூறுதல் சொல்லுதல்,பாராட்டுதல் அல்ல, ::

நெடுக்கு
1.இருபொருள் பட கருத்தாடும் முறை ::
2.நில உரிமைச் சான்று::
3.கண்ணாடியின் முக்கிய மூலப்பொருள்::
4.சிறு ஆண் குழந்தை::
5.பாணபட்டரின் நூல்::
6.மூன்று பக்கமும் தினறி பேசு,அல்லாடு::
7. நல்ல காரியம் செய்தவன், அதிருஷ்டசாலி ::
8.ஒரு நாட்டின் இயற்கை வளங்களில் இவையும் ஒன்று::
10.கஷ்டமில்லா நிலை, குறைவில்லா நிலை::
16.குந்துமணி, சுருக்கமாக, ஆனால் எழுத்து நடையில் சரியாக::குறைந்து::
17.புதிய - வின் எதிர்ச்சொல்::
19.சந்தோஷம் கொள், அக்களி::
21.பார்க்க, காண்க:: கனகவேல் காக்க, நொடியில் _____::
22.வரி, வட்டி, ___::
23.சோறு, சமைத்த உணவு (பழந்தமிழ்)::
24.ஆமை வடிவம்
25.சிவனை வழிபடுவோர்::
27. கனவு கண்டது பார்த்திபன். காண வைத்தவர் இவர்
30.அட்டாலி, மேல் தட்டு::
31.வசை::
32.சின்ன வயசு பொண்டாட்டி, (3,3)::
33.சவுபாக்கிய யோகம், அதிக தனம்:: (2,4)
35.எல்லா, அனைத்து::
37.தங்கத் தூய்மைக்கான அளவீடு::
38.’சுத்திகரிக்கப்படாத’ எண்ணெய் ::
39.அடுக்குத்தொடரான தாய், பாட்டியாகிறாள்::
42. விரகம் துன்பம் பாதி பாதி விரவி நின்ற அமைச்சன்((::சங்))::
43. குறும்புச் செயல்; குறும்புத்தனம் ::
44.சோலை::
45.விதை::
49.நன்றி 'தெரிவி'::
50.அதிகமாகிவிடல்::

வியாழன், டிசம்பர் 01, 2011

முதல் குறுக்கெழுத்து

எப்படியும் எனது புதிரின் கேள்விகள் வாரமலர் ரகம் என்றாகிவிட்டது. எனவே இலகுவாக இருக்கவேண்டியதே எனது இலட்சியமாகிவிட்டது. அதிக வார்த்தைச்செறிவு (குறைந்த வெள்ளைக்கட்டங்களில் அதிக வார்த்தைகளை இடுவது) என இந்த புதிரை அமைத்துள்ளேன். பிழைகளை சுட்டிக்காட்டவும்.






குறுக்கு::
 
1.போதி
4. வித்தியாசமாகிறதே , திருப்பிப் பார்த்தால் தேர்ச்சி பெறுமா
6. தினசரி மாறும் எண்::
8. சட்னி, மசாலா அரைவை இயந்திரம் (ஆங்)::
10. திறமைக்கான பரிசு::
12. சிறிய கண்ணாடி குடுவை
14.கொட்டும் தன்மையுள்ள வண்டு
16.பின்னர்
18.பிரபல பின்னணி பாடகி
20.மானவர்கள் குழுவாக தங்குமிடம்
22. துயில் கொள்
24. அதிகப்படி
25. இமாசலப் பிரதேச  தலைநகர்
27.சேலையின் மேல்பகுதி

நெடுக்கு
1. பார்வதி தேவி, உமையாள்
2. பெண்ணே உன் பின்னே நோக்கின் வருவதிந்த ஈரசைச்சீரே
3. குட்டிப் பெண்
5. உறுதியான மரத்தை அதிகமாக சேமித்து வை
7. வட்டமாக சுழலும்படி நகர்த்துதல்
9. இதன் உள்ளே முத்து இருக்கும்
11.வீட்டில் வளர்க்கும் மூலிகைச் செடி
13.ஜென்மம்
15.விதை
17.கொண்டை
19. ஜார்க்கண்ட் தலைநகர்
21. நிலை; வியப்பு; பிரமிப்பு, மலைப்பு
23. ஒன்றுமில்லை
26.மே.இ.தீவு பேட்ஸ்மேனா, உலக அழகியா




பிகு1::
குறுக்கு 4, இலக்கியாவின் வலைப்பூவிலிருந்து. இனிவரும் எல்லா புதிர்களிலும் இவ்வாறு மூலம் சுட்டிக்காட்டுவது கடினமே. எனவே பிற புனைவர்கள் பெருந்தன்மையோடு மன்னிக்க. 


பிகு 2:
பிறிதொருநாளில் ஜாவா, அல்லது டப்பாக்கள் மூலம் ஆன்லைனில் தீர்க்கும் வசதி ஏற்படுத்தப்படும். 


பிகு 3:
இந்த கட்டங்களில் எழுத்துக்களை நிரப்பியது வெறும் ஐயாயிரம் வார்த்தைகளே தெரிந்த எனது மென்பொருளே. நானல்ல.